ஒரு சக்கரத்தின் மேல்பகுதி, கீழ் நோக்கியும், கீழ்பகுதி மேல் எழுந்தும் செல்வதால் மட்டுமே இயக்கம் உண்டாகிறது. அதுபோலவே காலசக்கரமும் சுழல்கிறது. மேடு, பள்ளம் இருப்பதால்தான் மலைகளில் தன் பயணத்தைத் துவக்கும் நீர், நதியாக ஓடுகிறது. கீழ்நிலையில் உள்ளோர் முயற்சியால் மேலான நிலைக்கு செல்வதாலும். மேல் நிலையிலுள்ளோர் ஆணவத்தால் கீழான நிலையை அடைவதாலுமே தர்மசக்கரம் சுழல்வதை உணரமுடிகிறது. ஏற்ற தாழ்வால் வருவதே வாழ்க்கை. கிருஷ்ணன் நம்பூதிரியின் எண்ண ஓட்டத்திற்கு வடிவம் தந்ததுபோல் பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு தொழிலதிபர்.தான் தனியார் பேருந்துகளை இயக்கும் தொழில் செய்துவருவதாகவும், கடந்தசில வருடங்களாக பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, முடங்கிவிட்டதாக கூறி வருந்தினார். பிரசன்ன ஆரூடத்தின்மூலம், தொழிலில் மறுமலர்ச்சி கிடைக்குமா என்ற ஏக்கம் எதிரொலித்தது. மாங்கோட்டு காவு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், விருச்சிகத்திலமைந்தது. பத்தாமிடமாகிய சிம்மத்தில், சனி பகவானுடன் ராகு இணைந்திருந்தார்.
தொழில் சரிவு அரசாங்கத்தின் தலையீடு போன்றவற்றை அறியமுடிந்தது. அதிகார காரகனாகிய சூரியன் துலாத்தில் நீசமாகியிருந்தது. பத்தாமிடத்தோன் நீசமாவதும், தீய அறிகுறியைக் காட்டியது. வாகன காரகனாகிய சுக்கிரன் பரம நீசத்திலிருந்ததும் வீழ்ச்சியைக் காட்டியது. பதினாறு விதமான ஆயுதங்களை பதினாறு கைகளில் தாங்கி வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் ஆறுகோண சக்கரத்தில் அருள்புரியும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழி பட்டால் தொழிலில் ஏற்பட்ட சரிவு நீங்கும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்குமென்ற உபாயமும் தெரிவிக்கப்பட்டது. பரிகாரம் பலனளித்தது. பிரசன்னம் பார்க்கவந்தவரின் வண்டி சக்கரமும், வாழ்க்கை சக்கரமும் நிற்காமல் ஓடத்தொடங்கின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KJ_25.jpg)
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் அடிப்படை குணாதிசயம் காலபலத்தைக் கொண்டே அமையும். கிரகங்களின் ஆறுவிதமான வலிமைகளை பரிசீலித்து பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பதினாறு வர்கக்கணிதத்தின் (அம்சம்) மூலம் கிரக வலிமையை அறியமுடியும் என்றாலும் அதனால் மட்டுமே ஜோதிடக்கணிதம் முழுமைப்பெறாது. 1. ஸ்தானபலம், 2. பார்வைபலம் 3. திக்பலம் 4. நைசர்க்கிகபலம் 5. சேஷ்டாபலம் 6. காலபலம் ஆகிய சட்பலங்களையும் ஆராயும்போது மட்டுமே சரியான பலன்களை அறியமுடியும். ராசி கட்டத்தை மட்டுமே வைத்து பலன்களை சொல்லுவது ஒரு குருடன் யாணையைத் தடவிப்பார்த்து அதன் காதை முறம் என்றும், கால்களை தூண்கள் என்றும் தவறாக சொல்லுவதைப்போலாகும். ஆறுவிதமான பலங்களில் காலபலமே முக்கியமானது. வார, திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என்ற ஐந்து அங்கங் களிலும் ஓரை, முகூர்த்தம், ஜாமம், பொழுது (பகல்- இரவு), பட்சம் (சுக்ல பட்சம். கிருஷ்ண பட்சம்) ருது, அயனம், எனும் எல்லா காலவரையரைகளிலும் கிரகங்களின் வலிமைமையும் தன்மையும் மாறும் என்பதே உண்மை. நடு இரவில் சந்திரன், செவ்வாய், சனியுமே பலமானவர்களென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
மறுமணத்தால் வாழ்க்கை மலருமா?
கேள்வி: ஐந்து வருடங்களுக்குமுன் ஒரு விபத்தில் என் மனைவியை இழந்துவிட்டேன். மறுமணம் செய்துக்கொண்டால், வாழ்க்கை மலருமா? பரிகாரம் உண்டா?-
எண்- 108; ரேவதி- 4; ராசியாதிபதி- மீனம்; நட்சத்திராதிபதி- புதன்).
* சோழி லக்னத்திற்கு ஏழாம் அதிபதியாகிய புதன் ஆறாமிடத்திலிருப்பது வாழ்க்கைத் துணைவியின் இழப்பைக் காட்டுகிறது.
* ஒன்பதாம் அதிபதி ஏழிலிருப்பதால் இரண்டாவது திருமணத் திற்குப்பின் அதிஷ்டமான வாழ்க்கையை எதிர்பார்க்கலாம்.
* இரண்டில் ராகு அமர்வதும் இருதார திருமணத்தை உறுதிசெய்கிறது.
* ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் மறுமணம் கைகூடும்.
* பரிகாரத்தாலும் கடவுளின் கருணையாலும் பலன் கிடைக்கும்.
பரிகாரம்
நாமக்கல் மாவட்டத்தில் திருச் செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்த நாரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பரிகார பூஜைகள் செய்தால் களத்திர தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
(தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/KJ-t.jpg)